உள்ளடக்கத்துக்குச் செல்

வட கொரியப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியோங்யாங் பூப்பின்னல் நிறுவனத்தில்.
வட கொரிய இலாபெல் ஊசிகள்.

நிகழ்கால வட கொரியப் பண்பாடு (culture of North Korea) என்பது 1948 கால அளவில் வட கொரியா பிரிந்த பிறகு, மரபுக் கொரியப் பண்பாட்டைச் சார்ந்து உருவாகிய பண்பாடாகும்.

யூச்சே அல்லது சூச்சே கருத்தியல் கொரியாவின் பண்பாட்டுத் தனித்தன்மையையும் உழைக்கும் மக்களின் ஆக்கத்திறனையும் பொருளாக்க ஆற்றலையும் உறுதிபடுத்துகிறது.

வட கொரியக் கலை முதன்மையாக அறஞ்சார்ந்ததாக அமைகிறது; பண்பாட்டு புலப்பாடு, யூச்சே கருத்தியலைப் பதியவைக்கும் கருவியாகவும் மேலும் இது புரட்சிக்கானதும் கொரியத் தீவக ஒற்றுமைக்கானதுமான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதாகவும் அமைய வேண்டும். இதன்படி,அயல் அரசுகளும் மக்களும் , குறிப்பாக அமெரிக்கரும் யப்பானியரும் எதிர்மறைப் பாத்திரங்களை வகிப்பதாக காட்டப்படுவர்; புரட்சி வீர்ர்களும் வீராங்கனைகளும் தூயக் குறிக்கோள்கள் வாய்ந்த புனிதப் பாத்திரங்களாகக் காட்டப்படுவர். மூன்று முதன்மைக் கருப்பொருள்களாகத் தலைவரின் மதிநுட்பமும், புரட்சிப் போராட்ட இறப்பும் (குருதிக்கடல்), நிகழ்காலச் சமூக இன்பமும் மகிழ்ச்சியும் அமையும்.

கிம்-இல்-சங் யப்பானிய எதிர்ப்புப் போராட்டத்தில் செவ்வியல் தன்மை வாய்ந்த அரும்படைப்புகளை உருவாக்கியவராக்க் கருதப்படுகிறார். இவரது ஆளுமையின் கீழ் உருவாக்கப்பட்ட பூக்காரச் சிறுமி, குருதிக்கடல், தற்காப்புக் காவலரின் விதி, கொரியப் பாடல் ஆகியவை யூச்சே கலை இலக்கியத்துக்கான முன்வகைமைப் படிமங்களாக்க் கருதப்படுகின்றன." ஒரு 1992 செய்தித் தாள் அறிக்கை தன் அரை ஓய்வுக் காலத்தில் அவரது வாழ்க்கையின் மலரும் நினைவுகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும்—"மக்கள் விடுதலைக்கும் மகிழ்ச்சிக்கும் காணிக்கையாக்கப்பட்ட வீரக் காப்பியமாக இது அமைவதாகவும்" கூறுகிறது.

பருவமுறையில் குறுகிய பார்வையாளர்களுக்காகப் பாட்டு, நடனக் குழுக்களின் நிகழ்த்தல்களைத் தவிர, வேறு அயல்பண்பாட்டு தாக்கம் ஏதும் மக்கள் அடைவதில்லை. இளவேனில் நட்புக் கலை விழா போன்ற இந்நிகழ்த்தல்கள் ஆண்டுதோறும் உலக மக்களின் அறிமுகமாக ஏப்பிரல் மாதத்தில் நடக்கின்றன. வட கொரிய ஊடகம், 1980 களிலும் 1990 களின் தொடக்கத்திலும் நாட்டைக் கலையரசாக்க, தொடர்ந்து இடையறவின்றி கலைப் படைப்பில் ஈடுபட கிம்-யோங்-இல் கடந்தொகையை வழங்கியது. அப்போது வேறு எந்நாட்டிலும் நிகழாத அளவுக்கு வட கொரியாவில் கலை மறுமலர்ச்சி ஏற்பட்டது. உண்மையில் அப்போது இளவல் கிம் பண்பாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பு ஏற்றிருந்தார்.

பியோங்யாங்கும் மற்ற பெருநகரங்களும் அகல்விரிவான பண்பாட்டு நிகழ்வுகளை அளிக்கின்றன. "கலைப் பரப்பும் குழுக்கள்" நிகழ்த்திடங்களுக்குச் சென்று கவிதைபடித்தல், ஓரங்க நாடகம், பாட்டுகள் போன்றவற்றை உழைக்கும் மக்களின் வெற்றிகளைப் பாராட்டி நிகழ்த்துகின்றனர். இது மேலும் பல வெற்றிகலை ஈட்ட ஊக்கம் ஊட்டுகிறது. இந்நிகழ்வுகள் அறுவடைகாலங்களிலும் வேளாண்மைக்கு வேகமூட்டும் காலங்களிலும் ஊரகங்களில் கலைக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.

வழிகாட்டலும் கட்டுப்பாடும்

[தொகு]

கலை இலக்கிய ஆக்கத்தின் வழிகாட்டலும் கட்டுப்பாடும் அரசிடமும் கொரியத் தொழிலாளர் கட்சியிடமும் அமையும்.

பண்பாட்டுப் புலப்பாடு (மெய்ப்பாடு)

[தொகு]

பண்பாட்டுப் புல்பபாட்டின் மையக் கரு கடந்த கால சிறப்புகளைத் தன்மயப்படுத்தலும் முதலாளியக் கூறுபாடுகளைத் தவிர்த்தலும் ஆக அமையும்

இலக்கியம், இசை, திரைப்படம்

[தொகு]

முதன்மைக் கட்டுரைகள்: வட கொரிய இலக்கியம், வட கொரியத் திரைப்படம், வட கொரிய இசை

காம்கூங் பேர்ரங்கு, 1984 இல் கட்டி முடிக்கப்பட்ட வட கொரியாவின் மிகப்பெரிய திரையரங்கம்.

இசையும் இலக்கியமும் நாட்டின் கருத்தியலை வெளிப்படுத்தும் இடங்களாகும்.

பெருந்திரள் விளையாட்டு

[தொகு]

வட கொரியா பெருந்திரள் மக்கள் விளையாட்டுக்குப் பெயர்போனது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Portal, Jane (2005). Art Under Control in North Korea. Reaktion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86189-236-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_கொரியப்_பண்பாடு&oldid=3581354" இலிருந்து மீள்விக்கப்பட்டது